கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தங்கள் உறவுகளை இழந்த துக்கம் தாங்காமல் கருணபுரம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் அரசு தரும் நிதி உதவி வேண்டாம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.