காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக, ஆணையர் செந்தில் முருகன்
தெரிவித்துள்ளார். கோரம் (போதுமான உறுப்பினர்கள்) இல்லாததால் தீர்மானம் இயற்கையாகவே தோல்வி அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காததால் தீர்மானம் வெற்றிபெறவில்லை என்று மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் அறிவித்துள்ளார்.
திமுக கவுன்சிலர்கள் 22 பேர் மேயர் மகாலட்சுமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்த நிலையில், வாக்கெடுப்புக்கு முதல்நாள் அவர்கள் சுற்றுலா சென்றனர். நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததை அடுத்து தனது மேயர் பதவியை மகாலட்சுமி தக்க வைத்தார்.