காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி மீது, உதயநிதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக. திமுக கவுன்சிலர்கள் வழங்கிய கடிதத்தில், மக்கள் பணிகளை சரிவர மேற்கொள்ளாததால், உடனே அவரை ராஜினாமா செய்ய அறிவுறுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே நெல்லை, கோவை மாநகராட்சி மேயர்கள் ராஜினாமா செய்த நிலையில், இந்த விவகாரம் திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.