பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள மர்ஹவுரா காவல் நிலையத்தில் நேற்று அதிர்ச்சிக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பிரகாஷ் என்ற வாலிபர் 2 வருடங்களாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் காதலன் பிரகாஷ் தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் கோபமடைந்தார். இரவில் காதலனுக்கு போன் செய்து வரவழைத்து அவரது அந்தரங்க உறுப்புகளை கத்தியால் வெட்டியுள்ளார். காயமடைந்த பிரகாஷை போலீசார் பாட்னாவில் உள்ள சிருஷ்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.