காதலால் தனது வாழ்க்கை மாறிவிட்டதாக நடிகர் நகுல் தெரிவித்துள்ளார். வாஸ்கோடகாமா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் தான் முதலில் பைலட்டாக விரும்பியதாகவும், பிறகு காதலுக்காக விஸ்காம் படிப்பில் சேர்ந்ததாகவும் கூறினார். காதல் கை கூடாத நிலையில், ராணுவத்தில் சேர எடையை குறைத்ததாகவும் அதுவும் நடக்காத நிலையில் அதிர்ஷ்டவசமாக சினிமாவில் வந்து சேர்ந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.