தாமரையை மாற்றிவிட்டு புல்டோசரை தனது சின்னமாக பாஜக பயன்படுத்த வேண்டும் என கேரளாவைச் சேர்ந்த CPM மாநிலங்களவை எம்பி ஜான் பிரிட்டாஸ் விமர்சித்துள்ளார். கல்வி மூலம் புதிய கடந்த காலத்தை உருவாக்க பாஜக முனைவதாகவும், இனி வரலாற்றில் காந்தி காய்ச்சலில் இறந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கோட்சே வந்தார் என்று மாணவர்கள் படிப்பார்கள் எனவும் அவர் மாநிலங்களவையில் பேசியுள்ளார்