நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் எம்பி ப. சிதம்பரம் கிண்டலாக பேசி உள்ளார். அதாவது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள சிறந்த யோசனைகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்து கையாண்டிருப்பது மகிழ்ச்சி.
மேலும் பல யோசனைகளை பயன்படுத்தினால் மிக மிக மகிழ்ச்சி அடைவோம். காப்பி அடிப்பது இந்த அவையில் தடை செய்யப்பட்ட விஷயம் அல்ல. அவை ஊக்குவிக்கப்படும், பாராட்டப்படும் என்று கூறியுள்ளார்.