வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய துறைகள் சார்ந்த திருத்த மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசின் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக காப்பீட்டு சட்டம் 1938 இல் முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக ஆயுள், வாகனம், வேளாண் மற்றும் மருத்துவ காப்பீடு ஆகிய காப்பீடுகளை ஒரே நிறுவனம் மேற்கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது