வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் (ஜூலை 22 ஆகஸ்ட் 12) பல்வேறு முக்கியத் துறைகள் சார்ந்த திருத்த மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக காப்பீட்டு சட்டம் 1938இல் முக்கியத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக ஆயுள், வாகனம், வேளாண் & மருத்துவக் காப்பீடு ஆகிய காப்பீடுகளை ஒரே நிறுவனம் மேற்கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.