தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருணாச்சலபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆறுமுகநேரி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முகமது மற்றும் அபூபக்கர் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், 1.400 கிலோ கஞ்சா, பைக் மற்றும் வங்கி கணக்குகளை முடக்கி போலீசார் பறிமுதல் செய்தனர்.