தமிழகத்தில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அன்றாடம் சமையலுக்கு தேவைப்படும் காய்கறிகளின் விலை எகிறியதால் நடுத்தர வர்க்கத்தினர் பாதிப்படைந்தனர். இந்த நிலையில் தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி கிலோ ₹44, பீன்ஸ், அவரை ₹70, முருங்கைக் காய், சின்ன வெங்காயம் ₹40, முள்ளங்கி, உருளை ₹30, கத்திரி, வெண்டை, கோஸ், புடலங்காய் கிலோ ₹16-20 வரை விற்கப்படுகிறது.