கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி லடாக் சென்றுள்ளார். அங்கே பேசிய அவர், “நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். ராணுவ வீரர்களின் தியாகம் விலை மதிப்பற்றது. அவர்களின் தியாகம் என்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும். இந்தியாவின் பாதுகாப்பு துறையை மேலும் பலப்படுத்த இந்த நாளில் உறுதி ஏற்கிறேன்” என்றார்.