தூத்துக்குடி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் கார்த்திகேயன்(38). இவர் நேற்று தன்னுடன் பணியாற்றும் நாகராஜன் உட்பட 3 பேருடன் நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நத்தகுளம் அருகே சென்றபோது எதிரே வந்த வேன் ஒன்று கார் மீது மோதியதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.