காலநிலை மாற்றத்தால் பூமியின் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர். வட மற்றும் தென் துருவங்களில் பனிக்கட்டிகளில் இருந்து உருகும் நீர், புவியின் பூமத்திய ரேகையில் தஞ்சம் அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ளதாக கூறும் விஞ்ஞானிகள் இதனால் பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளனர்.