தமிழகத்தில் மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவத்துறையின் 21 பிரிவுகளில் உள்ள 3645 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்த அவர், இதற்கான தேர்வுகள் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அனைத்து தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழி தகுதித் தாள் இடம்பெறும் எனவும்.