காவல்துறையினரின் துணையுடன் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தை சுட்டிக்காட்டி உள்ள அவர், காவல்துறை தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவம் ஏற்பட்டிருக்காது என வருத்தம் தெரிவித்தார். மேலும் நீட் தேர்வு எதிர்ப்பு என்பது தேசிய அளவில் அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.