ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி 1.70 லட்சம் கன அடி நீர் வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் தொடர் கன மழை பெய்து வருவதால் கே எஸ் ஆர் மற்றும் கபினி அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. இதனால் உபரி நீர் முழுவதும் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணை முழுவதும் நிரம்பியுள்ளதால் கூடுதல் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.