காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர், சரங்கி மற்றும் ஹேமாவதி அணைகள் நிரம்பி வழிகின்றன. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 80 ஆயிரம் கன அடி வரை நீர் திறக்க வாய்ப்புள்ளதால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக காவிரியில் கலந்த 10 நாட்களாக பரிசளி இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.