கிராமப்புற வீடுகளுக்கான மானியத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது. அதில், வீடு, சாலைகள் மற்றும் வேலை உட்பட பல கிராமப்புற திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வீடுகளுக்கான மானியத்தை ₹1.20 லட்சத்தில் இருந்து ₹2 லட்சமாக உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ளது.