இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன், 1992 முதல் 2011 ஆம் ஆண்டு வரை 495 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 59 முறை ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளார். இதன் மூலமாக அதிகம் முறை டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டிஸ் முன்னாள் வீரர் வால்ஸ் (54), இலங்கை முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஜெயசூர்யா (53) ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.