இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 4,076 பவுண்டரிகள் விளாசி அதிக பவுண்டரி அடித்தோர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இதையடுத்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா 3,015 பவுண்டரிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் 2,781 பவுண்டர்களுடன் மூன்றாவது இடத்திலும், இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே 2,679 பவுண்டரிகளுடன் நான்காவது இடத்திலும், இந்திய அணியின் விராட் கோலி 2,647 பவுண்டரிகளுடன் ஐந்தாவது இடத்திலும் அடுத்தடுத்து உள்ளனர்.