நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் பல மாதங்கள் நீடிப்பதும் அதன் பிறகு பல மாதங்கள் கழித்து தீர்ப்பு வெளியிடப்படுவதும் தொடர்கிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் புதிதாக அமலுக்கு வந்துள்ள மூன்று கிருமினால் சட்டங்களின்படி கிரிமினல் வழக்குகள் மீதான விசாரணை முடிந்த நாளிலிருந்து 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.