சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்டம் 22 மாதங்களாக முடங்கி உள்ளது. இதுதொடர்பாக சித்தலம்பாக்கத்தை சேர்ந்த தயானந்த் கிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளிக்கப்பட்டது. அதில், தமிழக அரசின் நிதித்துறை இன்னும் ஒப்புதல் தரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையம்- கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் வழித்தடத்தை நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.