ராம ஜென்மபூமி பாஜகவுக்கு பாடம் கற்பித்துள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், குஜராத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் எனவும், பாஜகவினரை குறித்து வைத்துக் கொள்ளும்படியும் சவால் விடுத்துள்ளார். சபாநாயகர் என்பவர் யாருக்கும் தலைகுனியக் கூடாது எனவும், பிரதமருக்கு கை கொடுக்கும் போது மட்டும், சபாநாயகர் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.