UPSC தேர்வில் தமிழக இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, சிறப்பு ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 1000 குடிமைப் பணித் தேர்வு விண்ணப்பதாரர்கள் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வான அந்த மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு மாதம் ₹7,500 வழங்கப்படும். இதன்பின், முதல்நிலைத் தேர்வில் தேச்சி பெறும் மாணவர்களுக்கு ₹25,000 ஆண்டுதோறும் வழங்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.