குடியரசுத் தலைவர் உரையில் தொலைநோக்கு பார்வையில்லை என்று மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார். மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய அவர், குடியரசுத் தலைவர் உரையில் பட்டியலினத்தவர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோருக்கான அறிவிப்பில்லை, கடந்த உரையைப் போல இதுவும் மத்திய அரசுக்கு பாராட்டுதலாகத்தான் இருந்ததென்று குற்றம்சாட்டினார்.