தமிழகத்தில் எங்கு வீடு கட்டினாலும், ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு தாமதமின்றி அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 2,500 சதுரஅடி நிலத்தில் 3,500 சதுரஅடி பரப்பில் வீடு கட்ட அனுமதி கேட்டு நிறைய மனுக்கள் வருவதாகக் கூறிய அவர், இதனால் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள வேலைச்சுமையைக் குறைக்க வீடுகளுக்கு ஆன்லைனில் உடனடி அனுமதி புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.