தமிழகத்தில் 90 பணியிடங்களுக்கான குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது. தேர்வர்கள் http://tnpsc.gov.in என்ற இணைய முகவரிக்கு சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கடந்த மார்ச் 18-ல் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் ஏப்ரல் 27-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பித்தனர். இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் வரும் ஜூலை 13-ம் தேதி குரூப் -1 முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளது.