Group 2, Group 2ஏ பணிக்கு இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினியர், டாக்டர்கள் என்று 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், 1 பதவிக்கு 340 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தொடர்ந்து Group 2, Group 2ஏ பதவிக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ம் தேதி நடக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பதற்கான கால அவகாசம் நேற்று நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.