சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரும் தீர்மானத்தில் பங்கேற்பதை தவிர்க்கவே, அதிமுகவினர் வெளிநடப்பு செய்திருக்கலாம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். பேரவையில் பேச மனமில்லாததால் அதிமுகவினர் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்ட அவர், குறிக்கோளுடன் தான் அவர்கள் வெளிநடப்பு செய்கிறார்கள் என்றார். நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு கோரி பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது