புதிய 3 குற்றவியல் சட்டங்கள் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து இன்று நடந்த விசாரணையில், புதிய சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. இதுகுறித்து 4 வாரங்களில் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.