உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரில் சாமியாரின் சொற்பொழிவு, வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் முழு விவரத்தையும் சொல்ல வார்த்தைகள் பத்தாது. 122 பேர் இதுவரை இறந்துள்ள நிலையில் மேலும் பலர் இறக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அங்குள்ள அரசு மருத்த்துவமனைகளின் வெளியே சடலங்கள் குவிந்துள்ளன. இதனிடையில் பல்வேறு உடல்களை உறவினர்கள் அடையாளம் காண முடியாத பரிதாபமான நிலை ஏற்பட்டுள்ளது. உரிமை கோரப்படாத சடலங்களை கண்டுபிடிப்பதில் பலரும் சவாலை எதிர்கொள்கின்றனர்.