தமிழக அரசனது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் மக்களுடைய போக்குவரத்திலும் கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்தில் மினி பஸ்கள் இயக்க மீண்டும் அனுமதி அளிக்கப்படுவதற்கான புதிய வரைவு திட்ட அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. 1997ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் மீண்டும் மினி பஸ்கள் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்படுவதுடன், எந்தெந்த வழித்தடங்களில் இயக்குவது என்பது குறித்து RTOக்கள் முடிவு செய்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது