தெற்கிலிருந்து வடக்கு வரை இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குரலும், நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம் என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள கூட்டாட்சியை வலுப்படுத்துவோம் என கூறியுள்ளார்.