கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்வி கடன் ஒரு லட்சத்திலிருந்து ரூ 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி கூட்டுறவு வங்கி கல்வி கடன் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் படித்து முடித்து 6 மாதங்கள் கழித்து வரும் 5 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்தலாம். கூட்டுறவு வங்கிகளில் கல்வி கடனுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 10 சதவிகிதம் ஆகும். புத்தகம், தங்கும் விடுதி, உணவு உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த ஏதுவாக வழங்கப்பட்ட கல்வி கடன் 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தால் சிறுபான்மையின மாணவர்களுக்கு கூட்டுறவு வங்கி மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கடன் பெறலாம். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி 2, 3ஆம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கும் கல்வி கடன் வழங்கப்படுகிறது.