ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூலிப்படையை ஏவியவர் குறித்த பின்னணியை விசாரிக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். வழக்கில் உள்ள முரண்பட்ட தகவல்கள் குறித்த உண்மை நிலையை அறியவே சிபிஐ விசாரணை தேவை என்று பாஜக வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார். முன்னதாக காவல் நிலையத்தில் சரண் அடைந்த ஒருவரை என்கவுண்டர் செய்வதை இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்றும் அவர் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.