BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் புதுப்பேட்டை அருகே கூவம் ஆற்றில் வீசிய 11 செல்ஃபோன்கள் போலீசார் மீட்டுள்ளனர். அவற்றிலிருந்து தகவல்களை மீட்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது செல்போன்கள் சிக்கியுள்ளதால் மேலும் பலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.