சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கக்கோரி இந்தியா கூட்டணி சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 30ஆம் தேதி இந்த போராட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என்றும் ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கெஜ்ரிவால் 100 நாட்களை கடந்து சிறையில் உள்ளார்.