கேரளாவின் சக்தி குலங்கரா மீன்பிடி துறைமுகத்தில் விஞ்ஞானி வினேஷ் தலைமையில் இந்திய உயிரியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தினர். அப்போது ஆழ்கடலில் வாழும் புதிய வகை நாய் சுறா மீனை கண்டுபிடித்தனர். இது நாய் சுறா மீன் இனமான squalus hima – வை சேர்ந்ததாகும். இந்த தகவல் இந்திய உயிரியல் மைய ஆவண புத்தகத்தில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.