புதையலை கண்டெடுத்த பெண் கேரள மாநிலம் கண்ணூரில் மழைநீர் சேமிப்பு குழி தோண்டிய பெண் ஒருவருக்கு, புதையல் கிடைத்துள்ளது. செங்கலாய் பகுதியில் உள்ள தனியார் ரப்பர் தோட்டத்தில் கூலித் தொழிலாளர்கள் மழைநீர் சேமிப்பு குழிகளை தோண்டியுள்ளனர். அப்போது, மண்ணில் புதைக்கப்பட்டிருந்த விநோத பொருளை கண்டு அந்த பெண் அச்சம் அடைந்துள்ளார். முதலில், வெடிகுண்டு அல்லது மாந்திரீகம் என நினைத்தவர், பிறகு புதையல் என்பதை கண்டறிந்தார்.