நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் தளவாடங்கள் மற்றும் மனிதவள ஆதரவை நமது சகோதர மாநிலமான கேரளாவிற்கு வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் அதன் விளைவாக விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது பற்றி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். முழுவீச்சில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் அனைவரையும் காப்பாற்றும் என்று நான் நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.