வயநாடு நிலச்சரிவு விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இதுபோல் நடக்காமல் இருக்க நிலச்சரிவு பகுதிகளில் உள்ள சுரங்கம், குவாரி, சாலை, கட்டுமான திட்டங்கள் பற்றிய விவரங்களை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.