தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் சிலுவை கோவில் பகுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கம்பம் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள்.
அப்போது கம்பம் பகுதியில் உள்ள சர்ச் தெருவை சேர்ந்த அப்பாஸ் என்ற கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தார்கள். மேலும் அவரிடம் இருந்த 564 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.