இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது பிரதமர் மோடி பெரும் மதிப்பு வைத்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தை மோடி வணங்கியதை கிண்டல் செய்வது தான் திராவிட மாடல் என்ற அவர், அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும் என பாஜகவில் யாரும் கூறவில்லை என்றார். 400 இடங்களில் வென்றால் அரசியல் அமைப்பு சட்டம் மாற்றப்படும் என சில பாஜக தலைவர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.