கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீழமணக்குடியில் சாமிநாதன் என்பவருடைய வீட்டில் 5 பேர் கொண்ட கும்பல் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனை மும்பையில் உள்ள அவரது மகன் சிசிடிவி மூலம் கண்காணித்துள்ளார். உடனடியாக தனது தந்தையை எச்சரித்துள்ளார். பிறகு சாமிநாதன் வெளியே வந்த நிலையில் அந்த 5 பேரும் தப்பி சென்றனர். இரவில் மறைந்து இருந்துவிட்டு காலையில் பேருந்து ஏற முயன்ற கும்பலை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பிடித்தனர். பிறகு அவர்களை போலீசில் ஒப்படைத்தனர்.