நாடு முழுவதும் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என எஸ்எம்எஸ் அனுப்பிய சிறிது நேரத்தில் நுகர்வோரை தொடர்பு கொண்டு நிலுவைத் தொகையை செலுத்தும் படி கூறி மோசடி செய்வதாக கேஸ் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. முன்னதாக மின் இணைப்புகளை துண்டிப்பதாக கூறி மோசடிகள் நடைபெற்ற நிலையில் பொதுமக்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.