நடிகை கவுதமியின் நிலத்தை அபகரித்த வழக்கில் பாஜக நிர்வாகி அழகப்பனை இன்று போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது, அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, போலீசார் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாகவும், தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.