முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பும் விதமாக பாடல் பாடியதாக நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்த சீமான், பாடல் எழுதியவர்களை விட்டுவிட்டு பாடியவரை கைது செய்திருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் அவரும் அதே பாடலைப் பாடி, தன்னை கைது செய்யுங்கள் பார்க்கலாம் எனவும் காவல்துறைக்கு சவால் விடுத்துள்ளார்