உலகக்கோப்பை தொடருக்குப் பின், கணுக்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட காரணத்தால் முகமது ஷமி ஓய்வில் இருந்தது தெரிந்ததே. இந்நிலையில், சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு அவர் முதல்முறையாக பந்துவீச்சுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “கையில் பந்துடனும் மனதில் பேரார்வத்துடனும் திரும்ப தயாராக உள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.