வரும் 21ஆம் தேதி ‘குரு பூர்ணிமா’ தினத்தன்று ‘கைலாசா’ தேசம் அமைந்திருக்கும் இடத்தை அறிவிக்கவிருப்பதாக அதன் நிறுவனர் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் தலை மறைவான அவர், கைலாசா என்ற புதிய தேசத்தை நிர்மாணித்திருப்பதாக சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வந்தார். இந்நிலையில், அந்த தேசம் எங்கு இருக்கிறது என்று, அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.